புதுடெல்லி: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசியல் சட்டப்பிரிவு 124(2)-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்), இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக வரும் 27 அன்று பொறுப்பேற்க உள்ளார்.
நீதிபதி யு.யு.லலித், கடந்த 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் 13-வது தலைமை நீதிபதியாக 1971 ஆம் ஆண்டு பணியாற்றிய நீதிபதி எஸ் எம் சிக்ரி-க்கு பின்னர் வழக்கறிஞராய் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட நீதிபதி இவராவார்.
யு.யு.லலித் உச்ச நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
முன்னதாக, தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவி காலம் ஆக. 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
» “2014-ல் வென்றவர்கள் 2024 தேர்தலிலும் வெல்வார்களா?” - பிரதமர் மோடியை சீண்டிய நிதிஷ் குமார்
» விலை ரூ.25 - தபால் துறை மூலம் ஆன்லைனில் தேசியக் கொடி ஆர்டர் செய்வது எப்படி?
தற்போது 65 வயதாகும் யு.யு.லலித் அவரது பணிநிறைவு காலமான நவம்பர் 8-ம் தேதி வரை, 70 நாட்கள் தலைமை நீதிபதியாக செயல்படுவார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago