100 ஆண்டுகளுக்கு மேலாக பெலகாவியில் முஹர்ரம் அனுசரிக்கும் இந்துக்கள்

By இரா.வினோத்

பெங்களூரு: முஹர்ரம் மாத‌த்தின் 10-ம் நாளில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் ‌முஹர்ரம் நோன்பு அனுசரிக்கிறார்கள்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிரேபிதனூர் கிராமத்தில் இந்து ம‌க்களும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக முஹர்ரம் அனுசரித்து வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம்கூட இல்லை. ஆனால் அங்குள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் மாத‌த்தில் 5 நாட்கள் நோன்பு அனுசரிக்கின்றனர். முஹர்ரத்தின் முதல் நாளான நேற்று அந்த கிராமத்தின் சாலைகள் பச்சை நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நேற்று ஊர்வலமாக சென்ற கிராம மக்கள், ‘பக்கீரேஸ்வரர் சுவாமி தர்காவில் பாரம்பரிய இந்து முறைப்படி வழிபாடு நடத்தினர். பின்னர் ஊரின் நலனுக்காக வேண்டி வெளியூரைச் சேர்ந்த‌ முஸ்லிம் மதகுரு ஒருவரும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பாரம்பரிய கர்பலா நடனம், தீப்பந்த விளையாட்டு ஆகியவையும் சிறப்பாக நடைபெற்றது.

கர்நாடகாவில் இந்து - முஸ்லிம் மக்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்து மக்கள் முஹர்ரம் அனுசரிக்கும் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE