மேற்கு வங்கம் | அரசு பஸ் - ஆட்டோ மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 9 பேர் பலி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.

பிர்பும் மாவட்டத்தின் மல்லாபுர் அருகே உள்ள ராம்பூர்ஹட் என்ற இடத்தில் இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “அரம்பாக்கிலிருந்கு துர்காபூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதேநேரத்தில் ராம்பூர்ஹட்டிலிருந்து 8 பெண்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றும் அந்த வழியாக வந்தது.

இரண்டு வாகனங்களும் ராணிகஞ்ச் - மோர்கிராம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட, ஆட்டோவில் சென்ற 9 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஆட்டோவில் சென்ற பெண்கள் அனைவரும் விவசாயக் கூலிகள். வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராவுக்காக அரம்பாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்