ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கோயிலில் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 3 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சிகர் நகரில் கது ஷ்யாம் கோயில் உள்ளது. நேற்று ஏகாதசி என்பதால் நேற்று முன்தினம் இரவு முதலேசுவாமி தரிசனத்துக்காக கோயில்முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேற்று காலை 5 மணியள வில் கோயில் கதவுகள் திறக்கப்பட்டதும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஓடினர். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக சிலர் கீழே விழுந்தனர். இதில் 3 பெண்கள் மூச்சுத் திணறிஉயிரிழந்தனர். மேலும் 4 பேர்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து மன வேதனைப்பட்டேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந் தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
» மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி
இதுபோல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago