புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை (சிஏஜி) சுட்டிக் காட்டியது.
இந்த ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
கடந்த 2018-ம் ஆண்டில் வழக்கில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தரப்பு வாதம் கடந்த 2020 ஜனவரி 15-ல் நிறைவடைந்தது. எதிர்தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று உள்ளிட்ட விவகாரங்களால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடத்த முடியவில்லை என்றால் சிறப்பு அமர்வை நியமித்து தினசரி விசாரணை நடத்தலாம். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago