இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம்: எல்லையோர கிராம மக்களை வெளியேற்றும் பணி தொடர்கிறது

By ஏஎன்ஐ

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீதான பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் எல்லையை நோக்கி பொதுமக்கள் செல்வதற்கு பிஎஸ்எப் வீரர்கள் கடும் கட்டுப் பாடுகளை விதித்துள்ளனர். மேலும் எல்லையோரம் வசிக் கும் மக்களை அங்கிருந்து வெளி யேற்றி பாதுகாப்பான இடங்களில் முகாம்களை அமைத்து தங்க வைக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு பிஎஸ்எப் வீரர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே எல்லை யிலிருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் மக்கள் அனைவரையும் வெளியேற்ற பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் எல்லையோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அறுவடை செய்வ தற்கு சம்பந்தப்பட்ட விவசாயி களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பலூனில் மோடிக்கு தகவல்

பஞ்சாப் மாநிலம் தினநகரை அடுத்த கெசால் கிராமத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த 2 பலூன்களை அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் ஒப்படைத் தனர். அந்த பலூன்களில் ஒட்டப் பட்டிருந்த துண்டு தாள்களில் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான வாசகங்கள் உருது மொழியில் எழுதப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்