உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக மகேந்திர பட் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜக தலைவராக ஹரித்வார் தொகுதி எம்எல்ஏ மதன் கவுஷிக் இருந்து வந்தார். இந்நிலையில், இவருக்கு பதில் புதிய தலைவராக மகேந்திர பட் (50) நேற்று நியமிக்கப்பட்டார்.

கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் எழுதப்பட்டுள்ள நியமன கடிதத்தில் கட்சியின் தேசிய செயலாளர் அருண் சிங் கையெழுத்திட்டுள்ளார். புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர பட்டுக்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மதன் கவுஷிக் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பத்ரிநாத் தொகுதியில் போட்டியிட்ட மகேந்திர பட் வெற்றி பெற்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர சிங் பண்டாரியிடம் தோல்வி அடைந்தார்.

கார்வால் மண்டலத்தைச் சேர்ந்த மகேந்திர பட், பிராமணர் சமுதாயத்தையும், குமான் மண்டலத்தைச் சேர்ந்த புஷ்கர்சிங் தாமி தாக்குர் சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE