குஜராத் கள்ளச்சாராய சோகம் | 18 பேர் பலி: பலர் உயிருக்குப் போராட்டம்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியாகினர். பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் போட்டாட், பாவ்நகர், அகமதாபாத் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச் சாராய விற்பனை நடைபெறுகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடங்கியுள்ளது.

பூரண மதுவிலக்கு நடைமுறை சிக்கல்கள் கொண்டது. அதனாலேயே இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கின்றன என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்