புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் அரசில் உயர் பொறுப்பு (ஆளுநர் பதவி) உள்ளிட்டவை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த 4 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்துள்ளது. பணம் கைமாறும் முன்பாக இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தொலைபேசி உரையாடல்களை கேட்டதன் அடிப்படையில் மோசடி தொடர்பான நபரைக் குறிவைத்து சிபிஐ தேடுதல் வேட்டை நடத்தியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது ஆளுநர் பதவி வாங்கித் தருவதாக இவர்கள் தொலைபேசி மூலம் தகவல் பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கர்மால்கர் பிரேம்குமார் பந்த்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர விதால் நாயக், டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவறான உத்தரவாதத்தை அதாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக இவர்கள் கூறியுள்ளனர். அரசு நிறுவனங்களில் தலைவர் பதவியை பெற்றுத் தருவதாகவும், சில அமைச்சகங்களில் உயர் பொறுப்பை பெற்றுத் தருவதாகவும் இவர்கள் கூறியுள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் அபிஷேக்பூரா, கர்மால்கர்பிரேம்குமார் பந்த்கர் ஆகிய இருவரும் தங்களுக்கு உயர் அரசு அதிகாரிகளிடம் தொடர்பு உள்ளதாக நம்ப வைத்துள்ளனர்.
இது குறித்து சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றுத்தர ரூ.100 கோடி பேரம் பேசியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பந்த்கர் தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறியுள்ளார். இவர் மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான முகமது ஐஜாஸ் கானிடம் எத்தகைய அரசு வேலையை முடித்துத் தர தன்னிடம் வருமாறு கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்மால்கர் பிரேம்குமார் பந்த்கர், மகேந்திர பால் அரோரா, முகமது ஐஜாஸ் கான் மற்றும் ரவீந்திர விதால் நாயக் ஆகியோர் சில மூத்த அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் பெயர்களை அடிக்கடி உபயோகப்படுத்தியுள்ளனர். தங்களிடம் நேரடியாக உதவி கேட்பவர் மற்றும் அபிஷேக் பூரா மூலமாக வருபவர்களிடம் இதுபோல அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்மால்கர் பிரேம்குமார் பந்த்கர், தன்னை சிபிஐ உயர் அதிகாரி என கூறிக் கொண்டு காவல் நிலையத்தில் உள்ள போலீஸாரை அச்சுறுத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக நடக்கும்படி கூறியுள்ளதும் தெரியவந்துள்ளது. சில வழக்குகளில் தலையிட்டு அதை தங்களுக்கு சாதகமாக மாற்றும்படி கூறியதாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago