புதுடெல்லி: “என் இயற்பெயர் திரவுபதி அல்ல. எனது ஆசிரியர் எனக்கு வைத்த பெயர்தான் திரவுபதி” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றார்.
இதனிடையே, இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனது இயர்பெயர் குறித்த தகவலை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், “எனது இயற்பெயர் திரவுபதி அல்ல. என் இயற்பெயர் புதி. என்னுடைய வகுப்பு ஆசிரியருக்கு என் பெயர் பிடிக்கவில்லை. அதனால் திரவுபதி என என் பெயரை மாற்றினார்.
எனது ஆசிரியர் எங்கள் பழங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊர் வழக்கப்படி பெண் குழந்தை பிறந்தால், பாட்டியின் பெயர் வைப்பார்கள்; ஆண் குழந்தை பிறந்தால் தாத்தா பெயர் வைப்பார்கள்” என்றார்.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உரையாற்றினார். அதன் விவரம்: 'இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago