ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ. 4.45 கோடி உண்டியல் வருமானம்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் பக்தர்கள் ரூ. 4.45 கோடி உண்டியல் மூலம் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

உலகின் பணக்கார கடவுளாக போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

சராசரியாக ஒரு நாளுக்கு ரூ.2.25 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதாக தேவஸ்தானமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனிக்கிழமை பக்தர்கள் காணிக்கையாக உண்டி யலில் செலுத்திய பணம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எண்ணப்பட்டது.

1000 ரூபாய் கட்டுகள்

ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.4.45 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தியது தெரியவந்தது. இதில் சில பக்தர்கள் 1000 ரூபாய் கட்டுகளைகத்தை கத்தையாக காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இதற்கு முன்பாக, கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஒரே நாளில் ரூ. 4.25 கோடி உண்டியல் காணிக்கை வந்தது. இதற்கு முன்பு ஒரே நாளில் ரூ. 5.5 கோடி உண்டியல் வருமானம்தான் இதுவரை அதிகபட்ச ஒருநாள் காணிக்கையாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்