வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் 2021-ல் ரூ.6.9 லட்சம் கோடி வரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்றுவேலை செய்யும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு 2021-ம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் 87 பில்லியன் டாலர் (ரூ.6.9 லட்சம் கோடி)வரவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய வெளிநாட்டுப் பண வரவில் சீனா, மெக்ஸிகோவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. வெளிநாடுவாழ் சீனர்கள் மூலம் சீனாவுக்குள் 2021-ல் 53 பில்லியன் டாலர் பணம் வந்துள்ளது. அதேபோல், மெக்ஸிகோவுக்குள் 53 பில்லியன் டாலர், பிலிப்பைன்ஸுக்குள் 36 பில்லியன் டாலர், எகிப்துக்குள் 33 பில்லியன் டாலர் வரவாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து.. அமெரிக்காவில் வேலை செய்யும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் அதிக பணம்வரவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகள் உள்ளன. கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு இத்தகையவெளிநாட்டுப் பண வரவு உதவியாக அமைந்ததாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

இந்தியா

2 days ago

மேலும்