இலங்கை நெருக்கடி | அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இலங்கை கடந்த 70 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேபோல் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள்களின் விலைவும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து டெல்லியில் இன்று அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

முன்னதாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒட்டி கடந்த ஞாயிறன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நம் அண்டை நாடான இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியா அதில் தலையிட வேண்டும் என்று கோரினர். இந்திய தரப்பில் இருந்து எரிபொருள் அனுப்பப்படுகிறது. இன்னும் பல்வேறு வழிகளில் பல அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இருப்பினும் அரசியல் ரீதியான தீர்வுகளில் இந்தியா ஒதுங்கியே நிற்கிறது.

ஆனாலும், இலங்கையை தங்கள் பக்கம் வைத்திருப்பதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் கடந்த 4 மாதங்களில் இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூ.3,000 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. சீனா சார்பில் இலங்கைக்கு ரூ.543 கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை விவகாரம் குறித்துஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நாளை அதிபர் தேர்தல்: இலங்கையில் தற்போது ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக செயல்படுகிறார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயக, எஸ்எல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அழகப்பெரும ஆகிய 4 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

ரணிலின் அறிவிப்புகள்: இலங்கை அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க, 2 ஏக்கருக்கும் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.20 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ.440-க்கு விற்கப்பட்டது. இதன் விலையும் ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலுக்காக முன்பதிவு செய்துள்ள வாகனங்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளது என்று இடைக்கால அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயக, எஸ்எல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அழகப்பெரும ஆகிய 4 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்