நாடாளுமன்ற இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 18 ஆம் தேதி (ஜூலை 18) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்ந்நிலையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் ஆகிய பார்த்தைகள் அவை நாகரிகம் அற்றவை. உறுப்பினர்கள் அவ்வற்றைப் பயன்படுத்தினால் அவைக் குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகள் நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இதன் மீதான இறுதி முடிவை மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை துணைத் தலைவருமே முடிவு செய்வார்கள்.
» 2 மாநிலங்கள், 3 ஆன்மிக தலங்களை இணைக்கும் புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» இந்தியாவில் 16,906 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 15,447பேர் குணமடைந்தனர்
எப்படி தயாரிக்கப்படுகிறது: நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று எதன் அடிப்படையில் ஒரு வார்த்தை ஒதுக்கப்படுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களின் எந்த வார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்புகிறதோ. எதனால் சர்ச்சை உண்டாகிறதோ அவையெல்லாம் அவை மரபுக்கு எதிரானவை என கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இதற்காக ஆண்டுதோறும் சட்டமன்ற, நாடாளுமன்ற கூட்டங்களில் சர்ச்சை ஏற்படுத்திய வார்த்தைகள் தொகுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பட்டியலுக்காக 2021ல் இந்தியாவில் சர்ச்சையான வார்த்தைகளும், 2022 தொடங்கி இதுவரை காமன்வெல்த் நாடுகளில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் ப்ளட்ஷெட், ப்ளட்டி, பிட்ரேட், அஷேம்ட், அப்யூஸ்ட், சீட்டட் ஆகிய வார்த்தைகளும் இந்தியில் சம்சா, சம்சாகிரி, சேலாஸ் போன்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
'ashamed', 'abused, 'betrayed', 'corrupt', 'drama', 'hypocrisy', 'bloodshed', 'bloody', 'cheated, 'chamcha', 'childishness', 'corrupt', 'coward', 'criminal', 'crocodile tears', 'disgrace', 'donkey', 'drama', 'eyewash', 'fudge', 'hooliganism', 'hypocrisy', 'incompetent', 'mislead', 'lie', 'untrue என்று ஆங்கில அகர வரிசையில் இந்த வார்த்தைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தாண்டியும் கூட்டத்தொடரின போது அவ்வப்போதைய நிலவரத்திற்கு ஏற்ப சில வார்த்தைகளை சபாநாயகரோ, மாநிலங்களவை துணைத் தலைவரோ அவைக் குறிப்பில் இருந்து நீக்கலாம்.
மேலும் இந்த வார்த்தைகள் எல்லாம் எந்த இடத்தில் பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதையும் பொருத்து அவைக் குறிப்பிலிருந்து நீக்குவது முடிவு செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago