இந்திய, சீன அதிகாரிகள் 16-ம் கட்ட பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருதரப்பு வீரர்களுக் கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த மோதலுக்குப் பின்னர் எல்லையில் இரு நாடுகளும் கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தியதால் பதற்றம் அதிகரித் தது. பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர்அதிகாரிகள் நிலையில் இதுவரை 15 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.

இதையடுத்து, இருதரப்பில் இருந்தும் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர். எனினும் மேலும் சில பகுதிகளில் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. தற்போது லடாக்கின் பான்காங் ஏரியில் சீன ராணுவம் புதிதாக பாலம் கட்டி வருவதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்திய, சீனராணுவ அதிகாரிகள் நிலையிலான 16-வது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 17-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்தியாதரப்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.

இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே கடைசியாக மார்ச் 11-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE