குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுத்த செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துகள். நம்மை ஊக்கப்படுத்தி, வழி காட்டி, வாழ்க்கை பற்றி பலவற்றை கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரி யான குருமார்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இது. கற்றலுக்கும் ஞானத்திற்கும் நமது சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருமார்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்” என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குரு பூர்ணிமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள செய்தியில், “குரு தனது சீடனை அறியாமையாகிய இருளில் இருந்து அறிவாற்றல் என்ற பாதைக்கு அழைத்துச் சென்று, துறவு மற்றும் தவப் பாதையை காட்டுகிறார். குருவுக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் புனித திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

வியாசர் பிறந்த நாள்: ஒவ்வாரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பவுர்ணமி திதி,குரு பூர்ணிமாவாக கொண்டாடப் படுகிறது. மகாபாரத இதிகாசத்தின் ஆசிரியராக கருதப்படும் வேத வியாசரின் பிறந்த நாளை குறிக்கும் நாள் இதுவாகும்.

எனவே வியாச பூர்ணிமாஎன்றும் இந்நாள் அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதில் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கும் குருமார்களுக்கும் இந்த நாளில் நன்றி தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE