புதுடெல்லி: ஆகஸ்ட் 18-ம் தேதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த 2011-ல் ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், முன்ஜாமீன் கோரிடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் வாதிடும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராக முடியவில்லை என்று அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பூனம் ஏ பம்பா மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அதன் முந்தைய உத்தரவாதம் அடுத்த தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் வாய்மொழியாக உறுதியளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago