கன்வர் யாத்திரை செல்லும் வழியில் இறைச்சி விற்க தடை: உத்தர பிரதேச அரசு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

லக்னோ: கன்வர் யாத்திரை நடைபெறும் வழித்தடத்தில், திறந்தவெளியில் இறைச்சி விற்பதற்கு தடை விதிக் கும் நடவடிக்கைகளை உத்தர பிரதேச அரசு எடுத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை வரும் 14-ம் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெறும். அப்போது சிவ பக்தர்கள், கங்கை நதி கரைகளுக்கு யாத்திரையாக சென்று புனித நீர் எடுத்து வந்து தங்கள் சொந்த ஊர் மற்றும் வீட்டில் உள்ள சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வர்.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். கன்வர் யாத்திரை நடைபெறும் வழித்தடத்தில் போக்குவரத்து தடைகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மின்வசதிகள், சுகாதார வசதிகள்மற்றும் முதலுதவி வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய வும் உத்தரவிட்டார். யாத்திரை வழித்தடத்தில் திறந்த வெளியில் இறைச்சி விற்க தடை விதிக்க வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

இதையடுத்து கன்வர் யாத்திரை நடைபெறும் வழித் தடத்தில் திறந்தவெளியில் இறைச்சி விற்க வேண்டாம் என வியாபாரிகளிடம் போலீஸார் தெரிவித்தனர். இதற்குஇறைச்சி வியாபாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கரோனாவால் 2 ஆண்டுகளாக கன்வர் யாத்திரை நடைபெற வில்லை. இந்தாண்டு கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் உ.பி.யின் மீரட், முசாபர்நகர், காசியாபாத் மற்றும் பாக்பத் மாவட்டங்களில் முழு வீச்சில் நடைபெறுகின்றன. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்