அக்னி பாதை திட்டத்தால் விமானப் படை வலுவாகும்: ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி உறுதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது. கார்கில் போருக்குப் பிறகு முப்படைகளையும் வலுவாக்கு வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அளித்த பரிந்துரைகளே அக்னி பாதை திட்டமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. புதிய திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்களில் 25 சதவீதம் பேர் நிரந்தர பணியில் சேர்க்கப்படுவார்கள். இதன்படி இந்திய விமானப் படை இளமை, அனுபவம் உடையதாக இருக்கும்.

அக்னி பாதை திட்டம் தொலைநோக்கு கொண்டது. இந்த திட்டம் முப்படைகளுக்கு மட்டுமன்றி, சமுதாயத்துக்கும் பலன் அளிப்பதாக இருக்கும். நாட்டுக்கு சேவையாற்ற விரும் பும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும். பாதுகாப்பு துறையில் அக்னி பாதை திட்டத்தில் விமானப் படையில் சேர்க்கப்படும் இளைஞர் கள், புதிய தொழில்நுட்பத்தை விரைவில் கற்றுக் கொள்வார்கள் என்பதால் விமானப்படை நவீனமாகும், வலுவாகும்.

தற்போது விமானப்படையில் 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அக்னி பாதை திட்டத் தில் இந்த பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. இதுவரை 7.5 லட்சம் இளைஞர்கள் விண்ணப் பித்துள்ளனர். ஆள்சேர்ப்பு பணியை மேற்கொள்ள 13 குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்