கொசு ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக தொடங்குவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: வீடுகள், வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மக்களையும், சமூக அமைப்புகளையும் ஈடுபடுத்தும் வகையில், அவர்களது பங்கேற்புடன் மக்கள் இயக்கங்களை தொடங்குமாறு தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார்.

கொசு ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற மக்களின் பங்கேற்பு முக்கியமானது. சுற்றுப்புறங்களில் கொசு இனப்பெருக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த, நமது சொந்த வீடுகள் மற்றும் சமூகங்களுடன் தொடங்குவோம் என கொசு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தயார்நிலையை ஆய்வு செய்தபோது மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மழைக்காலம் தொடங்க உள்ளதை அடுத்து இன்று காணொலி மூலம் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் , டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஜார்கண்ட் மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா ஆகியோர் மெய்நிகர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொசு கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பல துறைகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு தேவை என்பதை மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் நெருக்கமாக பணியாற்றவும் மாண்டவியா மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

பூச்சிக்கொல்லிகள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றுடன் மருந்துகள், நோயறிதல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதையும், பயனுள்ள விநியோகத்தையும் உறுதிசெய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் மைக்ரோ-திட்டங்கள் மூலம் காலக்கெடு முடிவுகளுடன் பணியாற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பரிந்துரைத்தார்.

"விழிப்புணர்வு மேம்பாடு, சமூக அணிதிரட்டல் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்காக ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவோம்" என்று அவர் கூறினார். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சிகள் நாடு முழுவதும் நோய் பரவலைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் முக்கியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாநிலங்கள் தங்களின் சிறந்த நடைமுறைகளையும், பிறர் பின்பற்றும் சிறப்புப் பிரச்சாரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

சமூக அணிதிரட்டல் மற்றும் பங்கேற்பு, வெகுஜன விழிப்புணர்வு, சரியான நேரத்தில் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட சிறப்பு பிரச்சாரங்கள் மற்றும் முன்முயற்சிகளான எடுத்துக்காட்டுகளை மாநிலங்கள் பகிர்ந்து கொண்டன.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் போன்ற பல்வேறு தொற்று நோய் குறித்து மாநில வாரியான எண்ணிக்கை குறித்து மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவையும், 2030-ஆம் ஆண்டுக்குள் நிணநீர்க் கொதிப்பு நோயையும் ஒழிக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்