கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி 2022ஆம் ஆண்டுக்கான மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் நடந்தது.
இதில் கர்நாடக மாநில சினி ஷெட்டி இந்திய அழகியாகவும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரூபல் சவுகான் முதல் ரன்னர் அப் ஆகவும், உத்தரப் பிரதேசத்தின் ஷினாதா சவுகான் இரண்டாவது ரன்னர் அப் ஆகவும் தேர்வாகினர். மிஸ் இந்தியா சினி ஷெட்டிக்கு கடந்த ஆண்டு மிஸ் இந்தியா மகுடம் சூட்டி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகை நேஹா தூபியா, டினோ மோர்யா, மலாய்கா அரோரா, டிசைனர்கள் ரோஹித் காந்தி, ராகுல் கானா, நடனக் கலைஞர்கள் ஷிமாகர் தாவர், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இந்த மிஸ் இந்தியா போட்டி பகுதி ஆன்லைனிலும் பகுதி நேரடியாகவும் நடந்துள்ளது. நாடு முழுவதுமிருந்து 31 பேர் தேர்வு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மும்பைக்கு வரவழைக்கப்பட்டனர். பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அழகிகள் பல்வேறு பயிற்சிகளையும் மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை இறுதிப் போட்டி நடந்தது. அதில் நடுவராக பங்கேற்ற முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் நேஹா தூபியா, இந்தப் போட்டி தனது இனிமையான நினைவுகளை மீட்டுக் கொடுத்தது என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago