புரி: உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிகிழமை தொடங்கியது.இதையொட்டி புரி கடற்கரையில் மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரத சிற்பங்களை மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார். இந்த சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. 9 நாட்கள் நடக்கும்இந்த ரத யாத்திரை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன்பட்நாயக் முக்கிய நிகழ்வுகளின்போது அதைப் பிரபலப்படுத்தவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடற்கரையில் மணல் சிற்பங்களை உருவாக்குவார்.
ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை தொடங்குவதை முன்னிட்டு அதை விளக்கும் வகையில், புரி கடற்கரையில் 125 மணல் ரத சிற்பங்களை சுதர்சன் பட்நாயக் உருவாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து அவர் நடத்தி வரும் மணல் சிற்பக் கலை பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் சேர்ந்து இதற்கான பணியில் ஈடுபட்டனர். இந்த 125 சிற்பங்களை உருவாக்க 14 மணி நேரம் பிடித்தது.
» கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா
» பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரிப்பு: நெரிசலை குறைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா?
சுதர்சன் பட்நாயக் ஏற்கெனவே, புரி கடற்கரையில் 100 மணல் ரதசிற்பங்களை உருவாக்கி சாதனை படைத்தார். அது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இப்போது, அதை முறியடிக்கும் வகையில் 125 மணல் சிற்பங்களை உருவாக்கி உளளார். இதுவும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. மணல் சிற்பக் கலை எப்படி உருவானது என்பதன் சுவையான வரலாற்றுப் பின்னணியையும் சுதர்சன் பட் நாயக் கூறுகிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது. 16-வது நூற்றாண்டில் ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின்போதுதான் மணல் சிற்பக் கலை உருவானது. சுவாமி ஜெகந்நாதரின் தீவிர பக்தரான பல்ராம்தாஸ் என்பவர் பிரபலமான கவிஞராக விளங்கியவர். ஒருமுறை ரதயாத்திரையின்போது ரதத்தை இழுக்க அவர் அனுமதிக்கப்படவில்லை.
அதனால், வேதனையுடன் புரிகடற்கரைக்குச் சென்ற அவர் அங்குமணலால் ரதத்தை உருவாக்கினார். இப்படிப்பட்ட பின்னணியில் உருவானதுதான் மணல் சிற்பக் கலை. இவ்வாறு சுதர்சன் பட்நாயக் கூறினார்.
மேலும் 9 நாட்கள் நடக்கும்ரத யாத்திரையின்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறும் சுற்றுச் சூழலைதூய்மையாக வைத்திருக்குமாறும் மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago