கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் பாதியாக குறைந்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்ற நிதி ஆண்டில் வங்கி மோசடிகள் பாதியாகக் குறைந்துள்ளன. 2020-21 நிதி ஆண்டில் வங்கிகளில் பதிவான மோசடித் தொகை ரூ.1.05 லட்சம் கோடி யாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் பதிவான மோசடித் தொகை ரூ.41,000 கோடி ஆகும்.

குறிப்பாக ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை சென்ற நிதி ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேலான மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. 2021-22-ல் அது 118 ஆக குறைந்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் ரூ.100 கோடிக்கு மேலான மோச டிகளின் எண்ணிக்கை 167-ல் இருந்து 80 ஆக குறைந்துள்ளது. 2020-21-ல் பதிவான மோசடித் தொகை ரூ.65,900 கோடி, சென்ற ஆண்டில் ரூ.28,000 கோடியாக குறைந்துள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்