அரிய நட்பு மற்றும் நல்லியல்பின் அடையாளமாக ராம்தேவ், லாலு பிரசாத் யாதவ் இடையே புதிய உறவு மலர்ந்துள்ளது. யோகாகுரு பாபா ராம்தேவின் அனைத்து ஆயுர்வேதத் தயாரிப்புகளினால் ஈர்க்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், அந்த தயாரிப்புகளுக்கு ஒரே விளம்பரத் தூதர் நானே என்று நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
யோகாகுரு ராம்தேவை லாலு பிரசாத் யோகா பயிற்சி அமர்வுக்காக அழைத்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த அழைப்பு பதஞ்சலி ஆயுர்வேதத் தயாரிப்புகளுக்கான ‘புரோமோ’ நிகழ்வாக மாறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதஞ்சலி தயாரிப்புகளைத் தான் லாலுவுக்கு பரிசாக அளித்ததாக ராம்தேவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது கோல்டு கிரீமை லாலுவின் நெற்றியில் ராம்தேவ் தடவி, லாலு நெற்றி அதன் பிறகு தங்கம் போல் ஜொலித்ததாகவும் ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்திகளின் படி, பதஞ்சலி தயாரிப்புகளை பெரிதும் பாராட்டிய லாலு, “சாதாரண சோப்புகளில் சோடா அளவுக்கதிகமாக இருக்கும், ஆனால் ராம்தேவின் சோப் சருமத்தை ஆரோக்கியமாகப் பரமாரிக்க உதவும்” என்று கூறியதாக செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ராம்தேவ் மீது பலருக்கும் பொறாமை இருப்பதால் அவரது தயாரிப்புகளை விமர்சிக்கின்றனர் என்றும் லாலு கூறியதோடு, ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு ஒரே விளம்பரத் தூதர் நானே என்றும் கூறியுள்ளார்.
இருவருக்கும் முன்பிருந்த பகைமை திடீரென பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்புகளினால் மறைந்து ‘புதிய நட்பு’ மலர்ந்துள்ளதாக செய்தி வட்டாரங்களில் இது விதந்தோதப்படுகிறது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5,000 கோடிக்கு விற்பனை நிகழ்த்தியுள்ளதும், இதனை இரட்டிப்பாக்க ரூ.1,150 கோடி கூடுதல் முதலீடு செய்யபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago