அபார்ட்மென்ட் முதல் தனி வீடு வரை: நீலத்தடி நீர் பயனாளிகள் நாளைக்குகள் பதியாவிட்டால் நடவடிக்கை - மத்திய அரசு அதிரடி

By செய்திப்பிரிவு

சென்னை: நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவர்கள் கட்டயாம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்டமைப்பு, இண்டஸ்டரியல், மொத்த தண்ணீர் சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட எல்லா நிலத்தடி நீர் பயன்படுத்துவர்கள், தற்போது அல்லது புதிய நீலத்தடி நீர் பயன்பாட்டளர்கள் 30.6.2022 க்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

30.09.2022-க்குள் பூர்த்தி அடைந்த விண்ணப்பம் சமர்பிப்பதற்கு ரூ.10 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்துவதின் பேரில் 30.06.2022-க்குள் தாங்கள் நிலத்தடி நீர் எடுப்பதை பதிவு செய்வதற்கு இதன் மூலம் தற்போதைய பயனாளிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இத்தகைய நிலத்தடி நீர் எடுத்தல் சட்டத்திற்கு புறம்பாக கருதப்படும். மேலும் விவரங்களும் www.cgwa-noc.gov.in என்ற தளத்தில் லாக் ஆன் செய்க" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்