மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மும்பை குர்லா பகுதியில் நாயக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. 4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் சிதிலமடையும் நிலையில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்த கட்டிடத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, குடியிருப்புவாசிகள் காலி செய்யுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நாயக்நகர் சொசைட்டியின் D பிரிவு குடியிருப்பு நேற்று பின்னிரவு இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் ஆணையர் அஸ்வினி பிடே தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன.
மீட்புப் பணியில் ஐந்து ஜேசிபிக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
» 'அச்சப்படமாட்டேன்; என்னை கைது செய்யலாம்' - அமலாக்கத் துறை சம்மனுக்கு சஞ்சய் ராவத் ரியாக்சன்
» சமாஜ்வாதியின் கோட்டையான ஆஸம்கரில் வெற்றி - பாஜகவில் 3-வது எம்.பி.யான போஜ்புரி மொழி நடிகர் நிரவ்வா
அமைச்சர் ஆய்வு: சம்பவ பகுதிக்கு மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மும்பை மாநகராட்சி அவ்வப்போது பழைய கட்டிடங்களைக் கண்டறிந்து நோட்டீஸ் அளிக்கிறது. ஆனால் மக்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டாலும் காலி செய்வதில்லை. அதனால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்போதைய முக்கிய பணி மீட்புப் பணிகள் மட்டுமே என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago