வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் கனவு திட்டமான காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத் திட்டத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின், கோயில் வளாகம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் கோயில் வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதன்பின், கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோயில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி சுனில் குமார் வர்மா கூறும்போது, ‘‘விஸ்வநாதர் கோயில் வளாகம் விரிவாக்கத்துக்குப் பிறகு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.71 லட்சம் நன்கொடை வசூலானது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.5.45 கோடிநன்கொடை வசூலாகி உள்ளது’’ என்றார்.
உள்ளூர் பக்தர்கள் மட்டுமன்றி நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் ரூ.339 கோடி செலவில் கட்டப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago