தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

By இரா.வினோத்

பெங்களூரு: இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதி நவீன செயற்கைக்கோளை வடிவமைத்த‌து. இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

இந்த ஜிசாட் 24 அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் கடந்த மே 17-ம் தேதி விமானம் மூலம் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவின் கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கனரக ராக்கெட் ஏரியன்-5 மூலம் நேற்று செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதுகுறித்து நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் கூறுகையில், “ஜிசாட் 24 செயற்கைகோள், இந்திய விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட‌ சீர்திருத்தங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டதாகும். ஜிசாட்-24 செயற்கைக்கோளில் க்யூ பேன்ட் டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இருப்பதால் தொலைக்காட்சி டிடிஎச் மற்றும் செல்போன் சேவைக்குப் பயன்படும். இதன் சேவைகள் அனைத்தும் ‘டாடா பிளே’ (Tata Play ) நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட‌ப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்