காஷ்மீரில் 3 என்கவுன்ட்டரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின் குப்வார மாவட்டம், சண்டிகாம் லோலாப் பகுதியில் உள்ள காட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, கைது செய்யப்பட்ட சவுகத் அகமது ஷேக் என்ற தீவிரவாதி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

இதன் அடிப்படையில் ராணுவ வீரர்களும் குப்வாரா மாவட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் தீவிர வாதிகளை தேடும் பணியில் ஈடு பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதுபோல் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம், டி.எச்.போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படை யினர், தீவிரவாதிகள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், சத்போரா பகுதியில் நேற்று காலையில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப் பட்டார்.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் சம்பவங்கள் தொடர்கின்றன. இதில் பல தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உளவுத் தகவலின் அடிப்படையில் பெரும்பாலான என்கவுன்டர்களை ராணுவமும் காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்