காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: வரும் 23-க்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத் தின் 16-வது கூட்டம் ஜூன் 17-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் கர்நாடக அரசின் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலும் வெளியிடப்பட்ட‌து.

இதையடுத்து, தமிழக அரசு, சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘மேகேதாட்டு திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கக்கூடாது'' என கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘மேகேதாட்டு விவகாரத்தை தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் எதிர்க்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது ஆகியவற்றின் மூலம் தமிழக அரசு மீண்டும் காவிரி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது. இதனை கர்நாடக அரசு தக்கப்படி எதிர்க்கொள்ளும்'' என கூறியுள்ளார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்