உடல் எடையை 1 கிலோ குறைத்தால் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி - பாஜக எம்.பி.க்கு மத்திய அமைச்சர் கட்கரி அறிவுரை

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

அப்போது, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து நிதின் கட்கரி கூறியதாவது:

அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்துள்ளேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்துள்ளேன்.

இது தொடர்பான எனது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும் என அவரிடம் கூறினேன். ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தேன். இவ்வாறு கட்கரி தெரிவித்தார்.

இதையடுத்து, 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக 2 மணி நேரம் செலவிடுகிறார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “மத்திய அமைச்சர் கட்கரியின் அறிவுரைப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளேன். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுபடுத்த உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்