புதுடெல்லி: பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர்சர்மா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நூபுர் சர்மாவின் கருத்துக்கு முஸ்லிம் நாடுகள் பல இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்தியப் பொருட்களை நிராகரிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையடுத்து, நூபுர் சர்மாவின் கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இந்நிலையில் நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்த பாஜக, நவீன் ஜிண்டாலை கட்சியை விட்டு நீக்கியது. கட்சி பொறுப்பாளர்கள், பொதுவில் கருத்துக்களை தெரிவிக்கும் போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பாஜக அறிவுறுத்தியது. நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது டெல்லி போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி ஜுமா மசூதியில் நேற்று தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் உத்தர பிரதேசம் சஹாரன்பூரில் உள்ள மசூதிகளிலும் நேற்று தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago