குண்டுவெடிப்பில் வீரர் உயிரிழந்த சம்பவம் - காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் கைது

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டைக்காக, தனியார் வாகனம் ஒன்று வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டது. கடந்த வாரம் இந்த வாகனத்தில், பாதுகாப்புப் படையினர் 3 பேர் ரோந்துப் பணிக்கு சென்றனர். அப்போது இந்த வாகனம் தீடீரென வெடித்ததில் படுகாயம் அடைந்த ஒரு வீரர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததை உறுதி செய்தனர். இதில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு:

காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் சக்தராஸ் காண்டி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் ராணுவத்தினரும் போலீஸாரும் நேற்று காலை கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீது ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்