தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்க கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் பங்கேற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்ளாக இருந்த நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் முகமது நபி குறித்து அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:

பாஜக ஊடகப் பிரிவால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர்கள், தலைவர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கலாம். எந்தவொரு மதத்தின் தலைவர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிய பாஜக தலைவர்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டு 38 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளி யிடக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிடுவது, அறிக்கை வெளியிடும் முன்பு கட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE