மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனி நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் சாத்வி பிரக்யா சிங், தற்போது போபால் நகரில் உள்ள அரசு ஆயர்வேத கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். உஜ்ஜைனி நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிம்ஹஸ்தா கும்பமேளா தற்போது நடந்து வரும் நிலையில், அங்குள்ள ஷிப்ரா நதியில் புனித நீராடும் சாத்வியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி மருத்துவமனையில் நேற்று காலை சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார் சாத்வி.
இந்த விவகாரத்தில் சிறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதிய சாத்வியின் வழக்கறிஞர், அதன் நகலை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், மனித உரிமைகள் ஆணையர் உள்ளிட்டோருக்கு அனுப்பினார்.
அக்கடிதத்தில், “ஷிப்ரா நதியில் புனித நீராடும் சாத்வியின் கோரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் மாநில அரசு அனுமதி மறுப்பது ஏன்? கும்பமேளாவில் புனித நீராட வேண்டும் என்பது புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாத்வியின் இறுதி விருப்பம் ஆகும்” என்று கூறியுள்ளார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட 6 பேருக்கு என்ஐஏ அன்மையில் நற்சான்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago