பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது: அருண் ஜேட்லி

By செய்திப்பிரிவு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர் அளவை எட்டு வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரமிது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். நாட்டின் பொரு ளாதாரம் மிகவும் சவாலான சூழலில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சி விகிதம் மிகவும் மந்தமாக உள்ளது. இதை விரைவுபடுத்த வேண்டியுள்ளது. உயர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து முதலீட்டாளர்கள் மத்தி யில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இப்போது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் வளர்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப் படுபவை. அதன் பலனை பொறுத் திருந்து பாருங்கள் என்று ஜேட்லி கூறினார்.

கடற்படை நிகழ்ச்சியில் பங் கேற்ற ஜேட்லி செய்தியாளர் களிடம் இது குறித்து கூறியது: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது. இதனால் அரசின் வருவாயும் குறைந்துள்ளது.

பொருளாதாரம் உயர் வளர்ச் சியை எட்டும்போதுதான் முதலீட் டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகும். அதன் மூலம் வளர்ச் சிப் பாதைக்கான வழிவகைகள் உருவாக்கப்படுகின்றன. இந்த நட வடிக்கைகள் அனைத்து பங்கு தாரர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக கடந்த மூன்று வாரங்களாக ஆலோசித்து வருவதாக ஜேட்லி கூறினார்.

மத்தியில் புதிதாக பொறுப் பேற்றுள்ள பாஜக தலைமையி லான அரசின் முதலாவது பட் ஜெட்டை ஜேட்லி அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். பட் ஜெட் குறித்து தொழில்துறை மற்றும் வேளாண் துறையினரது கருத்துகளை ஜேட்லி ஏற்கெனவே கேட்டறிந்துள்ளார்.

பணவீக்கம் மிக உயர் அளவில் உள்ள நிலையில் அதிலும் குறிப் பாக உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் பற்றாக்குறையை குறைக் கும் வகையில் பட்ஜெட்டை தாக் கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எல் நினோ பாதிப்பால் பருவ மழை குறைவு மற்றும் இராக்கில் எழுந்துள்ள போர் பதற்ற சூழல் ஆகியன அரசின் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜி20 மாநாட்டில், நாட்டின் பொருளாதார வளர்ச் சியை முடுக்கிவிடுவதற்கான நட வடிக்கைகளை அரசு எடுக்கும் என்று சர்வதேச சமூகத்திடம் இந்தியா தரப்பில் உறுதி அளிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE