கான்பூர் கலவரம் | உ.பி.யில் 500 பேர் மீது வழக்குப் பதிவு; 36 பேர் கைது - பின்புலம் என்ன?

By செய்திப்பிரிவு

கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அங்கிருந்த கடைகளை மூடச் சொல்லி ஒரு பிரிவினர் நிர்பந்தித்தனர். அதற்குக் காரணம், பாஜக செய்தி தொடர்பாளர் நூபூர் சர்மா அண்மையில் கியான்வாபி மசூதி பற்றி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது என்று கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்தே இந்தக் கலவரம் நடந்துள்ளது.

இதுகுறித்து கான்பூர் காவல்துறை ஆணையர் விஜய்சிங் மீனா கூறுகையில், நேற்று மதியம் 50 முதல் 100 பேர் அடங்கிய குழு ஒன்று பாஜக செய்தித் தொடர்பாளர் நூபார் சர்மாவின் பேச்சைக் கண்டித்து ஊர்வலமாகச் சென்றனர். அப்போது திடீரென இன்னொரு குழுவினர் கற்களை வீசி எறிந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வலுத்தது கடைகள் சூறையாடப்பட்டன.

பரேட், நயி சடக், யதீமக்னா பகுதிகளில் போராட்டம் வெடித்தது. உடனே போலீஸ் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கான்பூர் வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500-க்கும் அதிகமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் 20 போலீஸார் உட்பட 40 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபூர் சர்மா

கான்பூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்திருந்தார். அவருடன் பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இத்தகைய சூழலில் கான்பூரில் நடந்த மோதல் பாதுகாப்பு குறைப்பாட்டையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமரின் வருகையின் போது கூட அமைதியை உறுதி செய்ய முடியாது அரசு மாநிலத்தில் தொழில் வளத்தை ஈர்த்து சாதனைகள் செய்வோம் என்று எப்படிக் கூறுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சாதி, மதம் கடந்து அரசு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்