கொல்ல வரும் கிரிமினலை கொலை செய்யலாம்: ஹரியாணா டிஜிபி சர்ச்சை கருத்து

By ஏஎன்ஐ

ஒரு குற்றத்தை தடுப்பதற்காக, ஒருவரை கொல்லும் உரிமை சாதாரண மனிதருக்கு உள்ளது என்று ஹரியாணா டிஜிபி கே.பி. சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்டீகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.பி. சிங் இது தொடர் பாக கூறும்போது, “பெண்கள் அவமதிப்புக்கு ஆளாகும்போதோ, வீடு அல்லது கடைக்கு தீ வைக்கும் போதோ, ஒருவரை கொலை செய்ய முயற்சி நடைபெறும்போதோ சம்பந்தப்பட்ட கிரிமினலை கொல் வதற்கு சாதாரண மனிதருக்கு சட்டப் படி உரிமை உள்ளது” என்றார்.

ஹரியாணா டிஜிபியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் உதாவத் என்ற கிராமத்தில் இரண்டு கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஹரியாணா போலீஸ் காவலர் ஒருவர் இவர்களை சுட்டதாக நம்பப்படுகிறது. இத்தருணத்தில் டிஜிபி கே.பி.சிங் இக்கருத்தை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்