திருப்பதி: கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். தற்போது சுவாமி தரிசனத்துக்கு 7 மணி நேரம் வரை ஆகிறது. பக்தர்கள் தினமும் உண்டியல் மூலம் சராசரியாக ரூ.4 கோடி காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக 20 கூடுதல் சிறப்பு ரயில்களை தென் மத்திய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஹைதராபாத்-திருப்பதி, திருப்பதி-காக்கிநாடா, திருப்பதி-ஹைதராபாத், திருப்பதி-காச்சிகூடா இடையே சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன. இதில் திருப்பதி-காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மட்டும் இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
57 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago