உத்தராகண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமை யிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், ஆட்சியைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மார்ச் 22-ம் தேதி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசிடம் நீதிபதிகள் 7 கேள்விகளை கேட்டிருந்தனர்.
முன்கூட்டியே விசாரணை
இந்நிலையில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நேற்று காலை 10:30 மணிக்கே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், நீதிபதி சிவகீர்த்தி சிங் பிற்பகல் நடைபெற உள்ள மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு குறித்த மற்றொரு அமர்வில் இடம்பெறவிருப்பதால், காலையிலேயே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.
அப்போது, உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, உண்மையில் அரசுக்கு உள்ள பலம் குறித்து தெரிந்து கொள்ளலாமே என்று யோசனை தெரிவித்தது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து 4-ம் தேதி (இன்று) பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago