இந்தியா திராவிடர்களுக்கு தான் சொந்தம்: ஒவைசி சர்ச்சைப் பேச்சு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியா யாருக்காவது சொந்தம் என்றால் அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கு மட்டும் தான் என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மும்பை அருகே பிவாண்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

இந்தியா தாக்கரேக்களுக்கோ, மோடி- அமித்ஷாக்களுக்கோ சொந்தம் இல்லை. அது என்னுடையது என்றும் நான் கூறவில்லை. உண்மையில் இந்தியா யாருக்கு சொந்தம் என்றால், அது திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான்.

முகலாயர்களுக்கு பின்னர் தான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வந்தன. எனவே அவர்களுக்கு முன்னதாகவே இஸ்லாம் வந்து விட்டது. ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது.

சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்துக்காக பிரதமர் மோடியை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நவாப் மாலிக்கிற்காக ஏன் பிரதமரை சந்தித்த முறையிடவில்லை. முஸ்லிம்களின் காவலன் என இந்த கட்சிகள் கூறி கொள்வது ஏமாற்று வேலையே.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்