லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7 வீரர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிச் சென்ற வாகனம், லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "பர்தாபூர் முகாமிருந்து 26 வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று முன்னணி துணை நிலையமான ஹனிஃப் பகுதிக்குச் சென்றது. சுமார் 9 மணிக்கு தோஷி பகுதியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக முடுக்கிவிடப்பட்டு, காயமைடந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மற்ற 19 வீரர்களும் மேல் சிகிச்சைக்காக வெர்ஸ்டன் கமான்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்துள்ள மற்ற வீரர்களை காப்பாற்றுவதற்காக அனைத்து தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்