இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானியாக அபிலாஷா பாரக் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா பாரக். இவருடைய தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தந்தையைப் போலவே ராணுவத்தில் ஆர்வம் கொண்ட அபிலாஷா, இந்திய விமானப் படையில் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் சேர்ந்தார்.

அதன்பின் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள விமானப் படை போர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். அங்கு பயிற்சி முடித்த 36 போர் விமானிகளுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போர் விமானிக்கான பதக்கத்தை அபிலாஷா பராக்கின் சீருடையில் வான் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி அணிவித்தார். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்தியாவின் முதல் பெண் போர் விமானியாக கேப்டன் அபிலாஷா பாரக் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்