“பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன்” - தி கிரேட் காளி விளக்கம்

By செய்திப்பிரிவு

புது டெல்லி: “பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன்” என அக்கட்சியில் இணைந்து சுமார் 100 நாட்கள் கடந்த நிலையில் விளக்கம் கொடுத்துள்ளார் தி கிரேட் காளி.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர் காளி. தலிப் சிங் ராணா என்பதுதான் அவரது இயற்பெயர். 49 வயதான அவர் மல்யுத்த விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர். WWE விளையாட்டில் சில காலம் விளையாடி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சொந்தமாக WWE பயிற்சி மையம் ஒன்றும் வைத்துள்ளார். இந்நிலையில், அவர் கடந்த பிப்ரவரி வாக்கில் பாஜகவில் இணைந்தார்.

இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார் காளி. "அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்தேன். இது வழக்கமான சந்திப்புதான். பாஜகவில் இணைந்ததை பெருமையாக கருதுகிறேன். பிரதமர் மோடியின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன்" என அவர் தெரிவித்துள்ளார். அவர் 7 அடி 1 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்