ஹைதராபாத்: உளவுத் துறை துணை இயக்குநர் தவறி விழுந்து மரணம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உளவுத் துறை அமைப்பின் துணை இயக்குநர், நிகழ்ச்சி ஒன்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது, ஆடிட்டோரியத்தின் மேடையில் இருந்து தற்செயலாக தவறி விழுந்து உயிரிழந்தார்.

குமார் அம்ரேஷ் (51) பாட்னாவை சேர்ந்தவர். இவர் ஹைதராபாத் உளவுத் துறை அமைப்பில் துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதன்கிழமையன்று ஷில்பக்கலா வேதிகா அரங்கத்தில், வட அமெரிக்க தெலுங்கு சங்கம் சார்ப்பில் நடக்கும் நிகழ்ச்சிக்காக (மே 20-ல் நடக்கும் இந்நிகழ்வில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொள்ள இருந்தார்) மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரும் அவருடன் பணிபுரியும் இதர ஊழியர்களும் பார்வையிட்டு வந்தனர்.

அப்போது, குமார் ஆடிட்டோரியத்தின் மேடையில் இருந்து தற்செயலாக தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த குமாரை அதிகாரிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சைப் பலனினிறி குமார் உயிரிழந்தார். அவரது உடல், உடல் கூறாய்வுக்காக உஸ்மானிய மருத்துவமனைக்கு அனுப்பி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தனது போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆடிட்டோரியத்தின் முனையை அடைந்ததை கவனிக்கவில்லை. இதன் காரணமாக தவறி விழுந்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.

குமாரின் மரணத்தை சந்தேகத்துக்குரிய மரண வழக்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்