உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சந்திப்பூர் கடற்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணை, டிஆர்டிஓ, இந்திய கடற்படையால், ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில், கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து முதல் முறையாக செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை அதன் இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக டிஆர்டிஓ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய கடற்படையால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வானிலிருந்து செலுத்தி பரிசோதிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சாதனையை நிகழ்த்திய டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் இந்திய கடற்படையினருக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதில் இந்தியா உயர் திறனை எட்டியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஷ் ரெட்டி, இந்த ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார். மேலும் இந்த புதிய ஏவுகணை இந்திய கடற்படையின் போர்த் திறனை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்