அரசு மருத்துவமனைகளில் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டம் - தெலங்கானாவில் அமைச்சர் தொடக்கம்

By என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள இதர மாவட்ட மக்களும் ஹைதராபாத் நகருக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ஹரீஷ் ராவ் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இவருடன் பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ரூ. 5-க்கு வழங்கப்படும் உணவை ரசித்து சாப்பிட்டனர்.

திட்டம் குறித்து அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறும்போது, “ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தெலங்கானா அரசு இந்த உயரிய நலத்திட்டத்தை தொடங்கி உள்ளது. ஏழை எளிய மக்கள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நோயாளிகள் மட்டுமின்றி, அவருடன் வரும் நபர்களும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கெனவே ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் இத்திட்டம் அம்மா உணவகத்தை போன்று நடத்தி வருகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டதால் மக் கள் மகிழ்ச்சி அடைவர்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்