புதுடெல்லி: வடக்கு டெல்லியில் நேற்று ரோகினி, கரோல் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுபோல் தெற்கு டெல்லியில், அமர் காலனி காவல் நிலையம் அருகில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலையில் தொடங்கியது.
மதன்பூர் காதர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானுல்லா கானும் பங்கேற்றார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்கள் வீசப்பட்டதால், பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்கார்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து அமானுல்லா கான் உள்ளிட்ட பலரை போலீஸார் கைது செய்தனர். டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும்போதும் அதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அமானுல்லா கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago