ரூபாய் மதிப்பு வீழ்ச்சி | 'நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்' - மோடிக்கு  ராகுல் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து பிரதமர் மோடியை கண்மூடித்தனமாக விமர்சிக்கப்போவதில்லை என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "மோடி ஜி, முன்பு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தபோது நீங்கள் மன்மோகன் ஜியை விமர்சனம் செய்தீர்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாயின் மதிப்பு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்காக நான் உங்களை கண்மூடித்தனமாக விமர்சனம் செய்யப்போவதில்லை.

ரூபாயின் வீழ்ச்சி ஏற்றுமதி நிபந்தனைகளுக்கு நல்லது. நாம் மூலதனத்துடன் ஏற்றுதியாளர்களுக்கு உதவி செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். தலைப்புச் செய்திகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கூறும்போது, "இந்திய ரூபாய் அவசர சிகிச்சை பிரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போது இல்லாத அளவிற்கு சரிந்து 77.04 ஆக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE