வீட்டில் மது பானங்கள்: 10 ஆண்டு சிறை அபாயத்தால் பிஹார் எம்.எல்.சி மனோரமா தேவி தலைமறைவு

By அமர்நாத் திவாரி

வீட்டில் மதுபானம் வைத்திருந்ததற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிஹார் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.சி. மனோரமா தேவி தலைமறைவாகியுள்ளார்.

12-ம் வகுப்பு இளைஞரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் ஒரு புறம் மகன் ராக்கி யாதவ், கணவர் பிந்தி யாதவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட, வீட்டில் மதுபானம் வைத்திருந்ததற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட எம்.எல்.சி. மனோரமா தேவி தலைமறைவாகியுள்ளார்.

காரை முந்திச் சென்ற ஆத்திரத்தில் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் கடந்த சனியன்று வர்த்தகர் ஒருவரின் இளம் மகன் ஆதித்த்யா சச்தேவ் என்பவரை சாலையில் சுட்டுக்கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ராக்கி யாதவ் அவரது தந்தை பிந்தி யாதவ் ஆகியோர் 2 வார நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த திங்களன்று கொலைக்குற்றத்தில் சிக்கி தலைமறைவான ராக்கி யாதவ்வை தேடி மனோரமா தேவி வீட்டுக்கு போலீஸார் சென்றபோது அவர் வீட்டில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மனோரமா தேவி தலைமறைவாகியுள்ளார். இன்று காலை மனோரமா தேவியின் வீட்டுக்கு போலீஸார் மற்றும் எக்சைஸ் துறையினர் சீல் வைத்தனர்.

இவரது வீட்டிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுக்குப்பிகள் 6-ஐ போலீஸார் கைப்பற்றினர். இதனையடுத்து சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, இதனையடுத்து அவர் நேற்று இரவு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சட்ட விரோதமாக மதுபானம் வைத்திருந்தால் பிஹார் மாநில புதிய சட்ட விதிகளின் படி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் வர்மா மீது 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இவர் தனது விருந்தாளிக்கு மதுபானம் அளித்ததாக வீடியோ ஒன்று வெளியானதை அடுத்து அவரும் சிக்கியுள்ளார். அவர் வீட்டிலிருந்து மதுபானம் எதையும் கைப்பற்றவில்லை என்றாலும் இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது முன் ஜாமீனில் உள்ளார்.

நிதிஷ்குமார் அரசில் சட்டம்தான் பேசும், மதுபான விவகாரத்தில் தவறிழைக்கும் எவரும் தண்டனையிலிருந்து தப்ப வாய்ப்பில்லை என்று ஐக்கிய ஜனதாதள செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

மேலும்